திருச்சி மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அருணாச்சல மன்றத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமை தாங்கினார். மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவிஷீலா செலஸ் முன்னிலை வகித்தார். . கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரதிநிதிகளில் அதிகப்படியான மகளிரை உருவாக்குதல், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்குதல், இளையோர்களுக்கு தற்காப்பு கலை கற்றுக்கொடுத்தல், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்துதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிகழ்வில் டாக்டர். ஜெயந்தி தியாகராஜன், மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.பி.நரேன், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கோகிலா, ஸ்டெல்லா, சத்யா, தெரேசா, பானுமதி, ஜெனிஃபர், கனகஜோதி, சமீரா பானு, நஜ்ரியா பேகம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.