திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய மற்றும் கூத்தைப்பார் பேரூர் கழகம் சார்பில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்..!
திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய அதிமுக மற்றும் கூத்தைப் பார் பேரூர் கழகம் சார்பில செயல்வீர வீராங்கனைகள் கூட்டம் பெல் ஏடிபி தொழிற்சங்கத்தில் நடந்தது.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் கட்சி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி பொதுமக்களை சந்திக்க அறிவுறுத்தி உள்ளார்.அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய மற்றும் கூத்தைப்பார் பேரூர் கழக அதிமுக சார்பில் நடந்த செயல் வீர-வீராங்கனைகள் கூட்டத்திற்கு திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் தலைமை வைத்தனர்.
அதிமுக நிர்வாகிகள் சுபத்ரா தேவி, ராஜ மணிகண்டன், ஏடிபி தொழிற்சங்க பொதுச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், அமைப்புச் செயலாளர் மனோகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எப்படி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும்,மேலும் கட்சி தொண்டர்கள் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதை விரிவாக எடுத்துக் கூறினார்கள்.இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ராஜராஜன், ராஜா கூந்தை துரைராஜ் , பாண்டியன் , பாலு, ராஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் நிர்வாகி பால மூர்த்தி நன்றி கூறினார்.