திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, சீனிவாசன் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை மற்றும் எஸ் ஆர் யுனைடெட் இன்ப்ரா டெவலப்பர்ஸ்(வேதா நிறுவனம்) இணைந்து நடத்தும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி தூய்மையே சேவை (Swachhata Hi Seva 2024 ) தலைப்பில் மாநகராட்சி மண்டலம் 5 இல் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. இம்முகாமை மண்டல 5 குழு தலைவரும், 22 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான விஜயலட்சுமி கண்ணன் தொடங்கி வைத்தார்.
முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு& மூட்டு அறுவை சிகிச்சை, சிறுநீரகவியல் மருத்துவ சிகிச்சை, காது மூக்கு தொண்டை மருத்துவம், புற்றுநோய் அறுவை சிகிச்சை, மகளிர்& மகப்பேறு மருத்துவம், காசநோய் & நுரையீரல் சிகிச்சை, பல் தாடை & முக சீரமைப்பு சிகிச்சை, கண் மருத்துவம் போன்ற சிகிச்சைக்கான பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 350 க்கு மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அலுவலகர்கள்,மருத்துவ பணியாளர்கள் செய்து இருந்தனர்