திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் பொதுமக்கள் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக மேயர் அன்பழகன் தகவல் …!

- Advertisement -

0

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியின் 5-வது மண்டலத்துக்குட்பட்ட 27-வது வார்டு சங்கீதபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம் பகுதியில்  நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பொது மக்களிடம் கோரிக்கை ளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.இக்கூட்டத்தில் சங்கீதபுரம்,ஆட்டுமந்தை தெரு,பள்ளிவாசல் தெரு,பாத்திமா தெரு, சவேரியார் கோவில் தெரு,ஜெனரல் பஜார்,வண்ணாரப்பேட்டை,தென்னூர், பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 42 மனுக்களை பெற்று கொண்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

- Advertisement -

முன்னதாக 27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர் திவ்யா,மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள்,உதவி ஆணையர்கள்,உதவி செயற் பொறியாளர்கள்,இளநிலை பொறியாளர்கள்,நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர்.தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.