திருச்சி நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சோழமாதேவி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததன் பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரதிபா தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் செல்போன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.