மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்:மாணவர்கள் கோரிக்கை!

- Advertisement -

0

கொல்கத்தாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் கொலை சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள்  பேரணியில் ஈடுபட்டனர். மேலும், மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

- Advertisement -

கொல்கத்தாவின் மையப்பகுதியில் தொடங்கிய இந்த பேரணி, மாநில சட்டசபை வரை சென்றடைந்தது. மாணவர்கள் கையில் பிளக்‌கார்டுகள் ஏந்தியபடி, ‘நீதி வேண்டும்’, ‘குற்றவாளிகளை தூக்கிலிடு’, ‘மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்’ போன்ற கோஷங்களை எழுப்பினர்.இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து, மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். பெண் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.