திருச்சியில் மா காவேரி மாரத்தான் போட்டி நாளை நடைபெறுவதை முன்னிட்டு டி-சர்ட் மற்றும் பதக்கம் வெளியிடும் நிகழ்ச்சி காவேரி மருத்துவமனையில் நடைபெற்றது.இதில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன் டீ சர்ட் மற்றும் பதக்கம் வெளியிட்டு, இப்போட்டியில் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து நடத்தும் மா காவேரி மாரத்தான் போட்டியில் அதிக பேர் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
உடற்பயிற்சி மற்றும் குடும்ப நல வாழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்த ஆண்டு ஆரோக்கியமான குடும்பம், மகிழ்ச்சியான குழந்தைகள் கருப்பொருளில் என்ற மாரத்தான் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க சுமார் 7500 பேர் பதிவு செய்துள்ளனர். 5 கிலோ மீட்டர், 10 கிலோமீட்டர், 21 கிலோ மீட்டர் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டி நடைபெற இருக்கிறது. முடிவில் தந்தி பெரியார் கல்லூரியில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.