தென்னிந்திய பூப்பந்து போட்டியில் லயோலா கல்லூரி வென்று ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்…!

- Advertisement -

0

சென்னை லயோலா கல்லூரி நடத்திய பெட்ரம் சுழற் கோப்பை தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்து போட்டி  மூன்று நாட்கள்  கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 16 கல்லூரி அணிகள் கலந்துகொண்ட இப்போட்டிகளை நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடத்தப்பட்டது.  JAMAL MOHAMED COLLEGE, TRICHY,PSG COLLEGE, COIMBATORE,LOYOLA COLLEGE ‘A’, & B’ ஆகிய நான்கு கல்லூரி அணிகள் லீக் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

முதல் லீக் போட்டியில் லயோலா கல்லூரி ஏ அணி  லயோலா கல்லூரி பி அணியை வென்றது.இரண்டாவது லீக் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி  பிஎஸ்ஜி கல்லூரி அணியை வென்றது.மூன்றாவது லீக் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி  லயோலா கல்லூரி பி அணியை வென்றது. நான்காவது லீக் போட்டியில் லயோலா கல்லூரி ஏ அணி பிஎஸ்ஜி கல்லூரி அணியை வென்றது.ஐந்தாவது லீக் போட்டியில் லயோலா கல்லூரி பி அணி பிஎஸ்ஜி கல்லூரி அணியை வென்றது.ஆறாவது லீக் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி 35 – 24, 35 – 17 என்ற புள்ளி கணக்கில் லயோலா கல்லூரி ஏ அணியை வென்று ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பெற்றது.

வெற்றி பெற்ற வீரர்களை ஜமால் முகமது  கல்லூரியின் செயலர் மற்றும் தாளாருமான ஏ.கே. காஜா நஜீமுதீன், பொருளாளர் எம.ஜெ. ஜமால் முகமது, இணை செயலாளர் கே. அப்துஸ் சமது, கௌரவ இயக்குனர் கே.என். அப்துல் காதர் நிஹால், முதல்வர் டி.ஐ.ஜார்ஜ் அமலரத்தினம், துணை முதல்வர் ஆர்.ஜாகிர் உசேன், விடுதி ஒருங்கிணைப்பாளர் கே.என். முகமது பாசில் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.