திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உள்ள வணிகவியல் துறையில் உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு “மனவளத்தை பாதுகாப்போம் ” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் வணிகவியல் துறை தலைவர் திருமதி ஸ்டெல்லா மற்றும் திருமதி கற்பகம் மற்றும் முனிவர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி ஆத்மா மருத்துவமனையின், சமூக மனநல ஆலோசகர் கரன் லூயிஸ் சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.