திருச்சி ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி), சுயநிதி ஆண்கள் பிரிவு வணிகவியல் துறை சார்பில்பேராசிரியர் இ.பி. முகமது இஸ்மாயில் என்டோவ்மென்ட் சார்பில் உறவு மேலாண்மை பற்றிய சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜமால் முகமது கல்லூரி முன்னாள் முதல்வர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் ஏ.எம். முகமது சிந்தாஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில் தனிப்பட்ட மகிழ்ச்சியிலிருந்து தொழில்முறை வெற்றி வரை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்தும் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உறவு மேலாண்மை இன்றியமையாதது என்று கூறினார். மேலும், இது உறவுகளை திறம்பட நிர்வகிப்பது வலுவான பிணைப்புகளுக்கும், அதிகரித்த கூட்டு மற்றும் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று விளக்கப்பட்டது. குடும்பம் உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், சொந்தம் என்ற உணர்வையும், வாழ்நாள் முழுவதும் கற்றலையும் வழங்குகிறது. சமூக பொழுதுபோக்கு மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மகிழ்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் படைப்பாற்றல் மற்றும் சமூக தொடர்புகளை வளர்க்கிறது என உரையாற்றினார்.
முன்னதாக வணிகவியல் துறைத் தலைவர் இ. முபாரக் அலி வரவேற்புரை வழங்கினார். கூடுதல் துணை முதல்வர் ஏ. இஷாக் அகமது தலைமையுரையாற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் அ. கா. காஜா நஜிமுதீன், பொருளாளர் ஹாஜி எம். ஜே. ஜமால் முகமது, உதவிச் செயலாளர் கே. அப்துஸ் சமது, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குநர் கே. என். அப்துல் காதர் நிஹால். கல்லூரி முதல்வர் டி. ஐ. ஜார்ஜ் அமலரத்தினம், துணை முதல்வர் ஆர். ஜாகிர் உசைன், கூடுதல் துணை முதல்வர் ஏ. ஜே. ஹாஜா மொஹிதீன், விடுதி நிர்வாக இயக்குனர் கா.ந முகமது பாசில், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக உதவி பேராசிரியர் கே. ரியாஜ் அகமது, நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வினை வணிகவியல்துறை பேராசிரியர்கள் மற்றும் துறைசார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.