தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வழிகாட்டும் குழு உறுப்பினராக வழக்கறிஞர் சீனிவாசன் தேர்வு!
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் வரும் 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு பணிகளை மேற்கொள்ள குழுக்களை அமைத்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.மாநாட்டுக்கான களப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் மாநாட்டு பணிகளுக்கென ஒருங்கிணைப்பு குழுக்கள் மற்றும் செயல் வடிவ குழுக்கள் அமைக்கப்படுகிறது. குழுவில் இடம்பெற்றுள்ள குழு தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் மாநாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
விஜய் அமைத்துள்ள மாநாட்டு குழுவில், ஒருங்கிணைப்பு குழு தலைவராக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்நிலையில் வழிகாட்டும் குழு உறுப்பினராக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.