மறைந்த வி.என். ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் குரல் ஒலித்தது…!(வீடியோ இணைப்பு)
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றவரும் எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த வி.என். ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுக சாா்பில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர். விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறாா். நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவா்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சுவாரசியப் பகுதியாக, ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் (ஏ.ஐ.) என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் குரல் ஒலித்தது. இதனைக் கேட்ட அதிமுகவினர் உற்சாகமடைந்ததைக் காண முடிந்தது. அதில், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை எம்ஜிஆர் பாராட்டி பேசியுள்ளார்.