KLA டிரஸ்ட் மற்றும் டெக் திவா அறக்கட்டளையும் இணைந்து பெண்களுக்கு இலவசமாக தொழில்நுட்பக்கல்வி பயிற்சி!
திருச்சி காஜாமலையில் உள்ள KLA டிரஸ்ட் நிர்வாகத்தின் அறங்காவலர் சுபாவிஜயரங்கன்,மற்றும் இரண்டாம் தலைமுறையினரான ஷாயிஸ்தா சிவகுமார், சுமையா நாஸ், அமீனா கலாம் , ஆசியா மாலிக் ஆகியோரின் முயற்சிகளின் திருச்சியில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை தொழில் நுட்பக் கல்வி வாயிலாக உயர்த்தும் புதிய நோக்கத்துடன் KLA அறக்கட்டளையை முன்னெடுத்து செல்கின்றனர்.இதன் முயற்சியால் KLA டிரஸ்ட் மற்றும் டெக் திவா அறக்கட்டளையும் இணைந்து பெண்களுக்கு அடிப்படை கணினி பயிற்சிக்கான பட்டறை கணினி குறியீடு பயிற்சி மற்றும் AI தொழில் நுட்பம் நிகழ்ச்சியை அறங்காவலர் சுபாவிஜயரங்கன் தொடங்கி வைத்தார். டெக் திவா நிறுவனத்தின் நிறுவனர் மனு சேகர் நிகழ்ச்சியில் தலைமையில் கணினி குறியீடு பயிற்சி மற்றும் AI தொழில் நுட்பம் அதில் மாணவர்களின் எதிர்காலம், இலவச கணினி பயிற்சிகள் KLA டிரஸ்ட் முலமாக வழங்குதல் பற்றி எடுத்து உரைத்தார்.
டிஜிட்டல் திறன்கள் பட்டறை, 30 வயதிற்கும்மேற்பட்ட பெண்கள், குறிப்பாக வீட்டுப் பெண்களுக்கு தங்கள் தனிப்பட்டமற்றும் தொழில்முறை வளர்ச்சிக்குத் தேவையான டிஜிட்டல் திறன்களை பற்றியும்,இதில் பங்கேற்றவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பக் கல்விக்கு தயாராகும் வகையில் பயிற்சிகளை பெற்றனர்.கல்லூரி பெண் மாணவர்களுக்கு ஜெனரேட்டிவ் AI மற்றும் ப்ராம்ப்ட் இன்ஜினீயரிங் பட்டறை நடைபெற்றது. இப்பட்டறை AI கருவிகளின் உபயோகம்,தொழில்களில் எப்படி பயன்படுகிறது என்பதையும்,படைப்பாற்றல் வாய்ந்த உரைகள், படங்கள், தீர்வுகளை உருவாக்கும் திறன்களை வளர்க்க உதவியது. பெண்களின் நிகழ்ச்சியை KLA டிரஸ்ட் நிர்வாக செயலாளர் ஷாயிஸ்தா சிவகுமார் மற்றும் துணை நிர்வாக செயலாளர் சுமையா நாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார்.சிறப்பு விருந்தினராக பிஷப்ஹீபர் கல்லூரியின் பயிற்சி & வேலை வாய்ப்பு அதிகாரி அனிதா கலந்து கொண்டார். காலையில் பெண்களுக்கு அடிப்படை கணினி பயிற்சிக்கான பட்டறை நடைபெற்றது. KLA டிரஸ்ட் மற்றும் டெக் திவா அறக்கட்டளையும் நிறுவன அறங்காவலர்களின் கனவுகளை நனவாக்குவதோடு மட்டுமல்லாது ,இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்பக் கல்வி மூலம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் KLA டிரஸ்ட் உறுப்பினர்கள் ஆசியா, அமீனா கலாம் மற்றும் மாணவிகளுக்கும்,பெண்களுக்கும் பங்கு பெற்று சிறப்பி த்தனர்.