திருச்சியில் கிட்ஸ் அண்டு பேமிலி ஷாப்பிங் கண்காட்சி தொடக்கம்…!

- Advertisement -

0

ட்ரை மேக்ஸ் ஈவன்ட் நிறுவனம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சென்ட்ரல் இணைந்து கிட்ஸ் அண்டு பேமிலி ஷாப்பிங் கண்காட்சி திருச்சி மன்னார்புரத்தில் உள்ள வி.எஸ்.எம் மஹாலில் சிறப்பு விருந்தினர் சிவசக்தி நர்சிங் ஹாஸ்பிடல் மருத்துவர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.இக்கண்காட்சியில் வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள்,பர்னிச்சர் வகைகள், கார்கள் இரண்டு சக்கர வாகனங்கள்,கிச்சன் வேர்ஸ், ஏ/சி ஷோரூம்கள் ஆர்கானிக் அண்ட் ஆயுர்வேதிக், புத்தக அரங்குகள், வீடு கட்டும் நிறுவனங்கள், மீன்கள் என 100 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.

- Advertisement -

கண்காட்சி காண வருபவர்களுக்கு  மேஜிக் ஷோ, பேய் வீடு காட்சி, 3டி ஷோ, ஸ்னோ வேர்ல்டு,வண்ண மீன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 50 வகையான புதிய கேம் ஷோ, 30 அடி உயரத்தில் கிங்காங் குரங்கு பொம்மை உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் அணிவகுப்பு இடம்பெற்றுள்ளன. 25 வகையான தண்ணீர் விளையாட்டு பலூன் கேம்ஸ், மிகப்பெரிய உணவுத் திருவிழா அரங்குகள் அமைந்துள்ளன.கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நிறுவனங்கள் 50 சதவீத தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.இதில் ரோட்டரி தலைவர் விஜய் சுரேந்திரன், ஈவன்ட் சேர் தமோதரன், மருத்துவர் ரத், ரோட்டரி செயலாளர் பிரபாகரன், ஒருங்கிணைப்பாளர் இம்ரான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் கண்காட்சியை பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கண்டுகளிக்க ட்ரை மேக்ஸ் ஈவண்ட் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். கண்காட்சி வரும் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.