கர்நாடகா மாநிலம் பெங்களூரு போலீசார், பல்வேறு வழக்குகளில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை பறிமுதல் செய்திருந்தனர். இவை பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாகும்.இதற்கு முன் பழைய நோட்டுகளை மாற்றி கொள்ள, ரிசர்வ் வங்கி வாய்ப்பு அளித்திருந்தது. தற்போது, ‘ஏற்கனவே கால அவகாசம் முடிந்து விட்டது. பழைய நோட்டுகளை இனி பெற முடியாது. இந்த நோட்டுகளுக்கு பைசா மதிப்பு இல்லை.இவை வெறும் காகிதம் மட்டுமே’ என, ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. எனவே, ரூபாய் நோட்டுகளை எரித்து அழிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக நீதிமன்றத்திடம், அனுமதி கோரியுள்ளனர். ‘அனுமதி கிடைத்ததும் நோட்டுகள் எரித்து அழிக்கப்படும்’ என போலீசார் தெரிவித்தனர்.