தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய கனிமொழி..!

- Advertisement -

0

சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவருமான, தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட அலுவலத்தில், தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவ படத்திற்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.