திருச்சி எடமலைப்பட்டி புதூர் RMS காலனி அண்ணாநகர் உள்ள ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திடலில் AIYF, SSC கபாடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் நான்காம் ஆண்டு மாபெரும் சிறுவருக்கான கபாடி திருவிழா நடைபெற்றது. இப் போட்டியில் பல்வேறு அணிகள் இடம்பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற செல்வம் முத்து குரூப் அணிக்கு மாமன்ற உறுப்பினரும், மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளருமான முத்து செல்வம் பரிசுத்தொகையும், வெற்றி கோப்பையும் வழங்கினார். அருகில் CPI வட்டச் செயலாளர் முருகேசன், வழக்கறிஞர் செல்வகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.