கே. இராமகிருஷ்ணா கல்லூரி இன்ஜினீயரிங் மற்றும் டெக்னாலஜி முதலாம் ஆண்டு தொடக்க விழா!

- Advertisement -

0

திருச்சி சமயபுரத்தில் கே. இராமகிருஷ்ணா கல்லூரி இன்ஜினீயரிங் மற்றும் டெக்னாலஜி யின் முதலாம் ஆண்டு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கடவுள் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியை முதலாம் ஆண்டு துறை தலைவர் தினேஷ் வரவேற்புரை நிகழ்த்தினர்.

- Advertisement -

தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் வாசுதேவன் மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசன் கல்லூரின் வளர்ச்சி பற்றியும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.வேலைவாய்ப்பு துறை தலைவர் நவாஸ், கல்லூரி இயக்குனர் குப்புசாமி நோக்க உரையாற்றினார். மேலும் கல்வி குழுமத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையுரை ஆற்றினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பேச்சளார் ராஜ்மோகன் கல்வியின் முக்கியத்துவத்தையும் இன்றைய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை தருகின்ற வகையில் பல கருத்துகளை விரிவாக எடுத்து உரைத்தார். முடிவில் முதலாம் ஆண்டு துறைத் தலைவர் செல்லமுத்து நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.