11,000 வைரக் கற்களில் ரத்தன் டாடா உருவம் செய்த சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி!

- Advertisement -

0

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர். உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது.

- Advertisement -

அங்கு ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மறைந்த ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி 11,000 வைரக் கற்களை வைத்து அவரின் உருவத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.