ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதலில் பிழைத்தவர்களால் நடத்தப்படும் அமைப்புதான் நிகோன் ஹிடாங்க்யோ. அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான தயக்கங்கள் அழுத்தத்திற்குள்ளான சூழலில் நிகோன் ஹிடாங்க்யோ அமைப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் அமைதிக்கான விருதுக் குழு தெரிவித்துள்ளது.
தங்களது வலி, வேதனையான நினைவுகளை கடந்து தங்களுடைய துயர அனுபவத்தை நம்பிக்கை மற்றும் அமைதியை விதைப்பதற்கு பயன்படுத்திய நிகோன் ஹிடாங்க்யோ அமைப்பினருக்கு மரியாதை செலுத்துவதாக அமைதிக்கான நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.உலகின் மத்திய கிழக்கு, உக்ரைன், சூடான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் யுத்தங்கள் நடைபெற்றுகொண்டிருக்கும் சூழலில் அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்திற்க்கு எதிராக போராடி வரும் நிகோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற நோபல் பரிசுகள் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் அறிவிக்கப்படும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்படுகிறது.