திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்லதிற்குட்பட்ட கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையிலான மாணவர்க ளுக்கான கபடி போட்டி தஞ்சை, பூண்டி, ஏ. வி. வி. எம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் நடைபெற்றது.திருச்சி மண்டலத்திலிருந்து, செயின்ட் ஜோசப், ஜமால் முகமது, கரூர், கொங்கு கலை மற்றும் அறிவியல், தந்தை பெரியார் அரசு கலை மறறும் அறிவியல், தஞ்சை மண்டலத்திலிருந்து பூண்டி,ஏ.வி.வி.எம். ஸ்ரீ புஷ்பம், மன்னார்குடி, மன்னை ராஜகோபாலசுவாமி அரசு கலை, தஞ்சை, கரந்தை, டி யூ கே கலை, திருவாரூர், திரு.வி.க அரசு கலை ஆகிய 8 கல்லூரி அணிகள் லீக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றன.
லீக் போட்டிகளில் ஜமால் முகமது கல்லூரி 7 போட்டிகளிலும் வென்று 14 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்து திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக கபடி போட்டி யில் தொடர்ந்து 9 வது ஆண்டாக சாம்பியன் அணியாக திகழ்ந்தது.கரூர், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 6 போட்டிகளில் வென்று 12 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்தது.தஞ்சை, பூண்டி, ஏ. வி. வி. எம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரி 5 போட்டிகளில் வென்று 10 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடம் பிடித்தது.
திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகள் எடுத்து நான்காவது இடம் பிடித்தது.பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தஞ்சை பூண்டி ஏ. வி. வி. எம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரி தலைவர் டி.கிருஷ்ணசாமி வாண்டையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் நான்கு கல்லூரி அணிகளுக்கு கோப்பைகள் மற்றம் சான்றிதழ்களை வழங்கினார்.