மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கபடி போட்டியில் ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்..!
24 கல்லூரி அணிகள் பங்கேற்ற சென்னை, லயோலா கல்லூரி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான 90வது பெர்ட்ராம் நினைவு கோப்பைக்கான கபடி போட்டியில்யில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரி பங்கேற்று அரையிறுதி போட்டியில் 33-15 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை வென்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.இறுதிப்போட்டியில் சென்னை, லயோலா கல்லூரியை 17-14 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பெற்று 90 ஆவது பெர்ட்ராம் நினைவு கோப்பையை கைப்பற்றியது.
கபடி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த கபடி வீரர்களை கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே. காஜா நஜீமுதீன், பொருளாளர் எம். ஜெ. ஜமால்ம முகமது, முதல்வர், டி. ஐ. ஜார்ஜ் அமலரத்தினம், கௌரவ இயக்குனர் கே.என். அப்துல் காதர் நிஹால், நிதியாளர் எஸ் ஷேக் இஸ்மாயில், உடற்கல்வி இயக்குனர் பி.எஸ். ஷா இன் ஷா ஆகியோர் பாராட்டினார்கள்,