கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி யில் ஜமால் முகமது கல்லூரி சாம்பியன்…!

- Advertisement -

0

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுகை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி திருச்சி, ஜமால் முகமமது கல்லூரியால்  நாக் அவுட் முறையில்  இரண்டு நாட்கள் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.9 கல்லூரி அணிகள் பங்கேற்ற ஹாக்கி போட்டியின் இறுதி போட்டியில் ஜமால் முகமது கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரியை 2-1 என்ற கோல் கணக்கில். வென்று முதலிடம் பிடித்து,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஹாக்கி போட்டியில் சாம்பியன் அணியாக திதழ்ந்தது.

- Advertisement -

மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, புதுகை, மாமனார் கல்லூரியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் ஜமால் முகமது கல்லூரி வீரர்களை கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே. காஜா நஜீமுதீன் சிறப்பு விருந்தினராக கலந்த கொண்டுபொருளாளர் எம். ஜெ. ஜமால்ம முகமது, நிதியாளர் எஸ் ஷேக் இஸ்மாயில், முதல்வர், டி. ஐ. ஜார்ஜ் அமலரத்தினம்,துணை முதல்வர் ஆர். ஜாகீர் உசேன், கூடுதல் துணை முதல்வர் இஷாக் அகமது, டீன், எஸ். இஸ்மாயில் மொஹைதீன், உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குனர் கே.என். அப்துல் காதர் நிஹால், உடற்கல்வி இயக்குனர் பி.எஸ். ஷா இன் ஷா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர், மற்றும் விளையாட்டு போட்டி செயலாளர் ஏ. மெஹபூப் ஜான் மற்றும் ஆண்கள் போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முன்னிலையில் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.