இந்திய வீரருக்கு அடித்த ஜாக்பாட்..தங்கத்தை வென்ற நவதீப்!

- Advertisement -

0

பாரிஸ் பாராலிம்பிக் ஆடவர் ஈட்டி ஏறிதல் எஃப் 41 பிரிவில் இந்தியாவின் நவதீப், 47.32 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். முதலிடம் பிடித்த ஈரானை சேர்ந்த பெய்ட் சயாஹ் தனது தேசிய கொடிக்கு பதில் வேறு கொடியை காட்டியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் காரணமாக நவதீப் முதலிடத்திற்கு முன்னேறி தங்கப்பதக்கத்தை வென்றவராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது. பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இது 7 ஆவது தங்கப்பதக்கமாகும்.

- Advertisement -

அதேபோல், மகளிர் 200 மீட்டர் டி12 பிரிவு ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சிம்ரன் 3 ஆவது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலத்துடன் இந்தியா 16 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.