திருச்சியில் நடந்த வன அலுவலக சங்கத்தின் மாநில பொதுக்குழுவில் பதவி உயர்வு வழங்கவேண்டும் என தீர்மானம்!
திருச்சியில் தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இணையதளம் மூலம் செய்யப்படும் இடமாறுதல்களில் உள்ள குளறுபடிகளை முழுமையாக களையவேண்டும். வன அலுவலர்களின் இடமாறுதலுக்காக கலந்தாய்வு நடத்தவேண்டும். வனகாப்பாளர் மற்றும் வனக்காவலர்களுக்கு 35 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள ஊதிய முரண்பாடுகளை தீர்க்க வேண்டும். வனச்சரக அலுவலர் பணியிலிருந்து உதவி வனபாதுகாவலர் பதவிக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பன உள்பட 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.