காவல்துறைக்கு நாளை பதிலளிக்க தவெக கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்…!

- Advertisement -

0

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

தொடர்ந்து செப்.23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதியை த.வெ.க கோரியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாட்டிற்கான அனுமதிகோரி கடந்த மாதம் 28 ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், கடந்த 1ஆம் தேதி மாநாடு தொடர்பான 21 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாநாடு நடத்திவது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை எழுப்பியுள்ள 21 கேள்விகளுக்கு, வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தி நாளைக்குள் (04-09-24) பதிலளிக்க தமிழக வெற்றிக் கழகம் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.