கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரொனால்டோவுக்கு தற்போது 38 வயது ஆகும் நிலையில் முதல்முறையாக தன்னுடைய ஓய்வு பற்றி பேசியுள்ளார். இவர் கிளப் கால்பந்து போட்டியில் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற நிலையில் இதுவரை தன்னுடைய போர்ச்சுக்கல் அணிக்காக உலக கோப்பையை வெல்லவில்லை.இந்நிலையில் இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று கூறியுள்ளார். ஓய்வுக்கு பிறகு ஒரு கால்பந்து கிளப்பை வாங்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் ஓய்வுக்கு பிறகு நிச்சயம் நான் ஒரு பயிற்சியாளராக ஆகமாட்டேன் என்றும் தெரிவித்தார்.