சிறுகமணியில் வேளாண் அறிவியல் நிலைய பொன்விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு..!

- Advertisement -

0

திருச்சி மாவட்டம் வேளாண் அறிவியல் மையம் சிறுகமணியில் வேளாண் அறிவியல் நிலைய பொன்விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குனர் முனைவர் பி.பொ.முருகன் சிறப்புரை ஆற்ற இருக்கிறார். எனவே அனைத்து வட்டார விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு நிலையத்தின் சார்பாக திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜன்பாபு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று வேளாண் அறிவியல் மைய பொன்விழா & நாளை ( 15.10.2024) பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  பிறந்தநாளை ஒட்டி மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. வீட்டிலேயே மரம் வளர்க்க விரும்புவோர் ஆதார் எண் மட்டும் கொண்டு வரவும். தோட்டம் போன்றவற்றில் மரம் வளர்க்க சிட்டா கொண்டு வரவும்.மேலும் விபரங்களுக்கு  0431 2962854 , 9171717832 தொலைபேசி எண்ணுக்கு அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளவும்.

Leave A Reply

Your email address will not be published.