திருச்சி ஶ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச அறிவியல் தினவிழா!

- Advertisement -

0

திருச்சி ஶ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆம் நாளாக நடைபெற்ற சர்வதேச அறிவியல் தினவிழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் பிச்சை மணி தலைமை வகித்தார்.கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஆர்.வெங்கடேஷ் சிறந்த புதிய படைப்புகளை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

- Advertisement -

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டில்லி பாபு விஜயகுமார், உனக்குள் ஒரு விஞ்ஞானி என்ற தலைப்பில் பேசினார்.உலகம் முழுவதும் யார் புதுமையாக சிந்திக்கிறார்களோ அவர்களே சாதிக்கிறார்கள் . அனைத்து துறைகளிலும் பல தொழில் நுட்பங்களை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.நான் பல விஞ்ஞானிகளுடன் பணிபுரிந்தாலும் நான் பார்த்த முதல் விஞ்ஞானி எனது அம்மா தான்.ஏன் என்றால் நான் சிம்னி விளக்கில் படிக்கும் போது என் படிப்புக்கு மாற்று வழி கண்டுபிடித்து என்னை ஊக்கப்படுத்தினார்.தற்போது மாணவ, மாணவிகள் கைப்பேசி மூலம் வாழ்க்கையை தொலைத்து கொண்டிருக்கின்றனர்.எனவே எதிர்கால வாழ்க்கையை நினைத்து உங்களுக்குள் இருக்கும் புதுமையான சிந்தனையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஆர்.வெங்கடேஷ் சிறந்த புதிய படைப்புகளை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.இந்த விழாவின் இறுதியில் கல்லூரி துணை முதல்வர் ஜி.ஜோதி நன்றி தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.