பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பதற்கு உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும் : கலெக்டர் அறிவிப்பு!

- Advertisement -

0

திருச்சி மேலப்புதூரில் உள்ள பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவிகள் கொடுத்த புகாரை விசாரிக்காத பள்ளி தலைமை ஆசிரியையான டாக்டரின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் கூறியதாவது:சம்பந்தப்பட்ட பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க தவறியதால் தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் தவறுகள் நடந்தால் அது பற்றி விசாரிக்கவும், அதை தொடர்ந்து புகார் அளிக்கவும்` உள்ளக புகார் குழு ‘ அமைக்க வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

- Advertisement -

இது கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. 10 பேர் கொண்ட பெண்கள் பணியாற்றக்கூடிய எல்லா இடங்களிலும் உள்ளக புகார் குழு கட்டாய அமைக்க வேண்டும். இதுவரை திருச்சி மாவட்டத்தில் 268 உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் இந்த குழு உடனடியாக அமைத்துக் கொள்ள வேண்டும். உள்ளக புகார் குழு அமைக்காத கல்வி நிறுவனங்களில் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்களோ, மாணவிகளோ இந்த உள்ளக புகார் குழுவிடம் புகார் செய்யலாம். இந்த குழுவினர் முழுமையாக விசாரித்து போலீசிடம் புகார் அளிப்பார்கள். அப்படி போலீசில் புகார் அளிக்க உள்ளக புகார் குழுவினர் மறுத்தால் அவர்கள் மீதும், அந்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்சோ சட்டத்தில் அந்த சரத்து உள்ளது. ஒருவர் தன்னிச்சையாக பாலியல் தொடர்பான புகார் கொடுக்க விரும்பினால் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் செயல்படும் உள்ளக புகார் குழுவில் கொடுக்கலாம் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.