திருச்சி திருவெறும்பூர் மற்றும் துவாக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் அருகில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி துவாக்குடி உள்ள அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் டாஸ்மார்க்கை அகற்றக்கோரி கிளைத் தலைவர் துளசிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் மோகன், புறநகர் மாவட்ட வைரவன், புறநகர் மாவட்ட செயலாளர் ஆமோஸ், மாநில குழு உறுப்பினர் பவித்ரன் கண்டன உரையாற்றினர்.மேலும் திருவரம்பூரில் தொழில்நுட்பக் கல்லூரி(ஐ டி ஐ) மற்றும் துவாக்குடியில் அரசு கலைக் கல்லூரியில் எதிரே இயங்கி வரும் டாஸ்மாக்கை மூடக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டனம் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.