ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர் ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர்…!

- Advertisement -

0

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 2008 முதல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை 17 சீசன் முடிந்துள்ளன. இதன் 18வது சீசன், அடுத்த ஆண்டு மார்ச் 14ல் துவங்குகிறது. இதற்கான வீரர்கள் ‘மெகா’ ஏலம் இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் துவங்கியது.ஐ.சி.சி., தலைவராக தேர்வாகி உள்ள ஜெய்ஷா, பி.சி.சி.ஐ., தலைவர் ரோஜர் பின்னி, அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்ற நிலையில், அவர்களில் 367 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 210 பேர் வெளிநாட்டினர்.

சமீபத்தில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. பத்து அணிகள் சார்பில் 46 பேர் தக்கவைக்கப்பட்டனர்.அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 6 வீரர்களை தக்கவைத்தது. சென்னை, கோல்கட்டா, மும்பை, லக்னோ, ஐதராபாத், குஜராத் அணிகள் தலா 5, டில்லி 4, பெங்களூரு 3, பஞ்சாப் 2 வீரர்களை தக்கவைத்தன. இவர்களுக்கு ரூ. 558.5 கோடி செலவிடப்பட்டது.சர்வதேச ‘டி-20’ போட்டியில் 96 விக்கெட் சாய்த்துள்ள இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், முதல் நபராக ஏலத்திற்கு வந்தார். இவரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருந்தது. ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணி ‘ரைட் டு மேட்ச்’ கார்டை பயன்படுத்தி தக்க வைத்தது

- Advertisement -

தென் ஆப்ரிக்க வீரர் ரபாடாவை ரூ.10.75 கோடிக்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது.ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க டில்லி, பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், அவரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி இவரை ஏலம் எடுத்தது.ரிஷப் பன்ட்டை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர் என்ற பெருமை ரிஷப் பன்ட்டுக்கு கிடைத்தது. இவரது ஆரம்ப தொகையாக ரூ.2 கோடி இருந்தது.இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் – ரூ.15.75 கோடி ( குஜராத் அணி), ஆஸி., வீரர் மைக்கேல் ஸ்டார்க் – ரூ.11.75 கோடி( குஜராத் அணி),இந்திய வீரர் முகமது ஷமி- ரூ.10 கோடி( ஐதராபாத் அணி),தென் ஆப்ரிக்க வீரர் டேவிட் மில்லர்- ரூ.7.50 கோடி( லக்னோ அணி),இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் – ரூ.18 கோடி ( பஞ்சாப் அணி),இந்திய அணி வீரர் முகமது சிராஜ்- ரூ.12.25 கோடி( குஜராத்),இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் -8.75 கோடி( பெங்களூரு),இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் – ரூ.14 கோடி( டில்லி அணி) ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.