செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று இந்திய ஆண்கள் & மகளிர் அணி சாதனை…!

- Advertisement -

0

5-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி ஸ்லோவோனியாவை கொண்டது. இதில் இந்தியா தரப்பில் குகேஷ் மற்றும் அர்ஜூன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இந்திய ஆண்கள் அணி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ்,பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வந்த அபிஜித் தலைமையிலான இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்று ஆட்டத்தில் அஜர்பைஜானுக்கு எதிராக விளையாடியது.திவ்யா, வந்திகா, ஹரிகா, தானியா மற்றும் அபிஜித் (கேப்டன்) ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.