இந்திய ஹாக்கி ஜாம்பவான் ஸ்ரீஜேஷ் ஓய்வு…!

- Advertisement -

0

பாரீஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது. கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஸ்ரீஜேஷ் அறிவித்துள்ளார்.

- Advertisement -

பாரிஸ் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்தவர் என்ற பெருமையும் ஸ்ரீஜேஷ்க்கு உண்டு. இந்நிலையில், ஸ்ரீஜேஷை மேலும் கவுரவிக்கும் வகையில் அவரது ஜெர்சி எண் 16க்கு ஓய்வு வழங்குவதாக ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஹாக்கி இந்தியா செயலாளர் போலா நாத் சிங், ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக பி.ஆர்.ஸ்ரீஜேஷ் தனது பணியை தொடர்வார். அவரது நினைவாக, இந்திய சீனியர் ஹாக்கி அணியில் 16ம் எண் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஜூனியர் ஹாக்கியில் 16ம் எண் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஜூனியர் ஹாக்கி அணியில் அவரைப் போன்ற ஒருவர் ஸ்ரீஜேஷின் 16ம் எண் ஜெர்சியை அணிந்து இருப்பார் என்றார். முன்னதாக, ஓய்வுக்குப் பிறகும் இந்திய ஹாக்கி அணியை பயிற்சியாளராகத் தொடர விரும்புவதாக ஸ்ரீஜேஷ் தெரிவித்திருந்தார். 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் நிலையில், இந்திய சீனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக ஸ்ரீஜேஷ் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.