ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன் சங்கத்தின் நிதி உதவியுடன் டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா!
திருச்சி ஹிந்து மிஷன் மருத்துவமனையில் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன் சங்கத்தின் நிதி உதவியுடன் டயாலிசிஸ் சென்டர் இரண்டாவது பிரிவை மாவட்டம் 3000 தின் கவர்னர் Rtn ராஜா கோவிந்தசாமி திறந்து வைத்தார். ஸ்கேனிங் மிஷினை ரொட்டேரியன் டாக்டர் ஜமீர் பாஷா திறந்து வைத்தார் . இங்கு ஏழை, எளியவர்களுக்கு பயனளிக்கும் வழியில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் செய்யப்படும்.
இந்த விழாவில் கௌரவ விருந்தினராக முன்னாள் ஆளுநர்கள் Rtn ஆனந்த ஜோதி, Rtn RVN கண்ணன் மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் Rtn தில்லை மனோகரன், ரோட்டரி மிட் டவுன் சங்கத்தின் தலைவர் Rtn க.ராமதாஸ், செயலாளர் Rtn ஆர் சீனிவாசன் மற்றும் முன்னாள் தலைவர்கள் Rtn பா. கௌரி சங்கர், Rtn V ரமேஷ், முன்னாள் செயலாளர் Rtn முத்துக்குமரவேல், ஹிந்து மிஷன் மருத்துவமனை செயலர் R திருநாவுக்கரசு மற்றும் ரோட்டரி உறுப்பினர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.