சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது. புதிய அமைச்சராக சேலம் ஆர்.ராஜேந்திரன்(சுற்றுலாத் துறை), ஆவடி சா.மு.நாசர்(சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன்),கோவி.செழியன்-(உயர் கல்வித்துறை), செந்தில் பாலாஜி(மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை) ஆகியோர் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.