அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா: கனிமொழி எம்.பி. பங்கேற்பு !
அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தூத்துக்குடி சத்யா ரிசார்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. கலந்துகொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில், தலைவராக சங்கர் மாரிமுத்து, பொதுச் செயலாளராக சுரேஷ்குமார், பொருளாளராக ஜோசப் கஸ்கரினோ, துணைத் தலைவர்களாக சேசையா வில்வராயர், செசில் மச்சாது, பிரேம் பால்நாயகம், இணைச்செயலாளர்களாக பின்டோ வில்வராயர், ரெனால்டு சில்வெர்ஸ்டர், பொன்குமரன், நிர்வாக செயலாளராக பாலமுருகன் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
மேலும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சியில், அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.