திருவெறும்பூரில் மது போதையில் பிரபல ரவுடி தலையை வெட்டி கொலை வழக்கில் வாலிபர் சரண்…!

- Advertisement -

0

திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (35) இவன் பிரபல ரவுடி. இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சுந்தர்ராஜ் போலீசாருக்கு பயந்து தனது வீட்டில் இரவு நேரத்தில் தூங்காமல் நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என படுத்து உறங்குவதும் வழக்கம். அதுபோல் சில தினங்களுக்கு முன்பு சுந்தர்ராஜ் சித்தப்பா மணி வீட்டின் மொட்டை மாடியில் படுத்தி இருந்த பொழுது தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கடந்தார்.

- Advertisement -

இது சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி (47) என்பவரது தங்கை பரிமிளா என்பவர் உடன் சுந்தர்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பரிமிளாவிற்கும் சுந்தரராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் பரிமளாவை சுந்தர்ராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சுந்தர்ராஜூக்கும் ,பரிமிளாவுக்கும் உள்ள கள்ளத் தொடர்பு வெட்ட வெளியானதாகவும் இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் மூர்த்தி அவரது மகன்கள் ஆன வடிவேல் (25) வயது மற்றும் 17 வயது மகன் மற்றும் அவரது தங்கை பரிமளா மகன் மாரிமுத்து ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சுந்தர்ராஜை திர்த்து கட்டுவதற்கு திட்டமிட்டதாகவும், அதன் அடிப்படையில் கடந்த 12ஆம் தேதி இரவு சுந்தரராஜிற்கு வடிவேல் மற்றும் அவரது தம்பியும் அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர். அளவுக்கு அதிகமாக மதுவை குடித்த போதையில் சுந்தர்ராஜ் மணி வீட்டின் மொட்டை மாடியில் படுத்து உறங்கி உள்ளார்.

அப்பொழுது இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கணேஷ் மூர்த்தி மற்றும் அவரது மகன்களான வடிவேல் மற்றும் 17 வயது மகன் மற்றும் மாரிமுத்து ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சுந்தர்ராஜன் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது கழுத்தை அறுத்து பின்னர் தலையை துண்டித்து கொலை செய்ததோடு அந்த தலையை சுந்தர்ராஜன் உடலின் அருகே வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது அதன் அடிப்படையில் போலீசார் கணேசமூர்த்தி மற்றும் அவரது மகன்களான வடிவேல் மற்றும் 17 வயது மகனையும் கைது செய்துள்ளனர்.மேலும் தலைமறைவாக உள்ள மாரிமுத்துவை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.