திருச்சியில் மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ஆர்ஆர் எஸ்.ரெங்கசாமி தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஆர்.கே. சிவசாமி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நிர்வாகிகள் டாக்டர் வடிவேலன், அண்ணாதுரை, கே.என்.ஆர். முருகன், லோகநாதன், ராமலிங்கம், வக்கீல் கன்னியப்பன், லோகநாதன், ஜெகநாதன்,அழகயன்,சங்கர்,ராஜாராம் வேலுசாமி மற்றும் தமிழக மற்றும் பிற மாநிலங்களில் இருந்து போயர் சமுதாயத்தை சேர்ந்த சமுதாய நல சங்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள போயர் சமுதாய மக்களை ஒன்றிணைத்து ஒரே கூட்டமைப்பாக உருவாக்கி அடுத்த ஆண்டு 2025ல் மாநாடு நடத்துவது என்றும்,வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் ராஜ்ஜியம் கட்சி சார்பில் தமிழகத்தில் செல்வாக்கு உள்ள தொகுதிகளில் போட்டியிடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.