தென்காசியில் மூன்றரை வயது குழந்தை ஸ்கேட்டிங் மூலம் 5 கிலோ மீட்டர் தூரத்தை 50 நிமிடத்தில் கடந்த சாதனை!

- Advertisement -

0

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் செல்வராஜ். இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு கேடன்ஸ் மார்ஷியா என்ற மூன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்த சிறுமி ஸ்கேட்டிங் மூலம் 5 கி.மீ தூரத்தை கடந்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். இச்சிறுமியின் சாதனை நிகழ்ச்சியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறுமி சுரண்டை எய்ம்பார் லைப் மூலம் 3 மாத காலம் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் சுரண்டை அருகே உள்ள இரட்டை குளம் பகுதியில் தொடங்கி சுரண்டை அண்ணா சிலை வரையிலான 5 கிலோமீட்டர் தூரத்தை 50 நிமிடத்தில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

வழி நெடுகிலும் சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் ஆரவாரத்துடன் உற்சாகமூட்டினர். அண்ணா சிலை வந்தடைந்த சிறுமிக்கு உலக சாதனைக்கான சான்றிதழும், கேடயமும் சிவராமன் வழங்கினார் அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சுரண்டை நகர்மன்ற உறுப்பினர் வள்ளி முருகன் வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், ரத்னா சில்க்ஸ் ரத்தினசாமி, எய்ம்பார் லைப் நிர்வாகி முருகேஸ்வரி ஜெயராஜ் ஸ்கேட்டிங் மாஸ்டர் தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்க தென்காசி மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.