திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் இரண்டு சக்கர வாகன பேரணி மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் நடை பெற்றது.இதில் பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பிரின்சி மெர்லின், பிஷப் ஹீபர் கல்லூரி விரிவாக்க நடவடிக்கைகளின் டீன் வி. ஆனந்த் கிதியோன், அபிராமி டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் பூங்கொடி சுப்பிரமணியன், திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.பேரணி பிஷப் ஹீபர் கல்லூரி முதல் கலெக்டர் அலுவலகம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் பால் அஜித்குமார், இளையராஜா, சுகுமார், பவுல்ராஜ், ஜூனு, வதனா ஆல்பர்ட் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்