திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ஹவுராவிலிருந்து திருச்சிக்கு ரயிலில் வந்து கருப்பு பையுடன் சந்தேகத்துடன் ஒருவர் வந்து இறங்கினார். அப்போது ஆறாவது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின், க்ரைம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குழுவினர் அந்த நபரை பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அவர் பையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூபாய் 75 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இந்தப் பணம் ஹவாலா பணம் என கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேவமாணிக்கம் மகன் ஆரோக்கியதாஸ் என தெரிய வந்தது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு காவல் துறையினர் வருமானத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வருமானத்துறை துணை இயக்குனரிடம் பணத்தை ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமானத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.