தமுமுக 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் & கொடி ஏற்றும் நிகழ்ச்சி…!
தமுமுக 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 28 (அ) வது வார்டு கிளை மற்றும் ஐஸ்வர்யா மருத்துவமனை இணைந்து இலவச பொதுமருத்துவ முகாமை மாவட்ட தலைவரும், கவுன்சிலருமான பைஸ் அகமது தொடங்கி வைத்தார்.இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.இம்முகாமில் அண்ணாநகர் பகுதி செயலாளர் தென்னூர் சதாம், மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாநில நிர்வாகிகள் முகமது ரபீக், நஜீர், மண்டல செயலாளர் தல்ஹா பாபு,மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் பக்ரூதீன், மாவட்ட ஊடக அணி பொருளாளர் உஸ்மான் கான், மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர்கள் முகமது ஷரீப், இலியாஸ், அண்ணாநகர் பகுதி தலைவர் அப்துல் நாசர் பகுதி தமுமுக செயலாளர் துபை காஜா பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தென்னூர் ஹைரோட்டில் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா கொடி ஏற்றி வைத்தார்.இதற்கான ஏற்பாடுகளை 28 வது வார்டு நிர்வாகிகள் அமீர் அப்பாஸ், அப்துல்லாஹ், நியாஸ், ஜாபர் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.