திருச்சி பாலக்கரையில் ஞான வித்யா அக்குபஞ்சர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற அக்குபஞ்சர் பயிற்சி வகுப்பில் பி ஹெச் டி மற்றும் டிப்ளமோ பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார். விழாவில் பயிற்சி மைய இயக்குனர்கள் சரவணமுத்து ஜியாவுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயிற்சி முடித்து சான்றிதழ்களை பெற்றனர்.