அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 35 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியா, நேபாளம், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, நியூசிலாந்து, ஓமன், கத்தார், தென் கொரியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, தாய்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் விசா தேவையில்லை என்றும், 6 மாத காலம் விசா இல்லாமல் பயணிக்கலாம் என்றும் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.