ஜெயா சிறப்பு பள்ளி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் நடத்திய விநாயகர் சதுர்த்தி விழா!
உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சியில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் மற்றும் ஜெயா சிறப்பு பள்ளி இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடியது. இதில் மாணவர்களுக்கு விநாயகர் உடை உடுத்தி விநாயகர் பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் தலைவர் ஜெகதீஷ், செயலாளர் அப்துல் ரஹீம் மற்றும் பொருளாளர் பிரபு மற்றும் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். அனைத்து குழந்தைகளுக்கும் பொறி சுண்டல் கொழுக்கட்டை வழங்கப்பட்டது.