உள்ள புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் யோகா கராத்தே சிலம்பம் இலவச வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வேதநாராயணன் அனைவரையும் வரவேற்றார்.இந்த இலவச வகுப்புகளை மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் ரொட்டேரியன் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இது சிறப்பு அழைப்பாளராக ஜோசப் கண் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரி சுபா பிரபுகலந்து கொண்டார். உலக கராத்தே கூட்டமைப்பு, தலைவர் – பாரம்பரிய மற்றும் விளையாட்டு கராத்தே சங்கம் தமிழ்நாடு தலைவர் கிராண்ட் மாஸ்டர் இளஞ்செழியன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பம் மற்றும் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை நேரடியாக எடுத்தார்.
இந்த வகுப்புகள் தொடர்ந்து நடத்த சிறப்பு விருந்தினர் ரோட்டேரியன் சீனிவாசன் நன்கொடை அளித்தார். இந்த நிகழ்ச்சியை ரோட்டரி கிளப் ஆப் திருச்சி தென்றல் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.