திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம், வாசன் கண் மருத்துவமனை,துளசி பார்மசி மற்றும் சூர்யா டென்டல் கேர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.முகாமை மாவட்ட நீதிபதி அ.மணிமொழி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை குற்றவியல் நீதிபதி என்.எஸ். மீனா சந்திரா,சார்பு நீதிபதி சி.சிவக்குமார்( செயலாளர் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு மற்றும் நீதிபதிகள் எம் பாலாஜி, பி சுபாஷினி, கே ஆர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
\நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் ஸ்டானிஸ்லாஸ், குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், துணைத் தலைவர் சசிகுமார், இணைச்செயலாளர் விஜய் நாகராஜன் மற்றும் டாக்டர்கள் பி செந்தில்குமார், ரூபியா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் செய்திருந்தார். தமிழக வழக்கறிஞர் சங்கத்தில் முதன் முறையாக இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவச ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சுகர் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இம் முகாமில் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிபதிகள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.