விராலிமலையில் சிவிபி பவுண்டேஷன், ஸ்ரீ ராமகிருஷ்ணா சிறப்பு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்…!
விராலிமலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்.விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிவிபி பவுண்டேஷன், ஸ்ரீ ராமகிருஷ்ணா சிறப்பு மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சர் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.இந்த மருத்துவ முகாமில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை, எலும்பு தேய்மான பிரச்சனை , சக்கரை நோய், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் குடல் நோய்கள், கண் பரிசோதனை உள்ளிட்ட பலவித மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக தரப்பட்டு மருத்துவ சிசிக்சைகள் சிவிபி பவுண்டேஷன் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டது
இது மருத்துவ முகாமில் தலைமை மருத்துவர் விஜய் ஆனந்த் தலமையிலான பத்துக்கு மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு ஏழை எலியோருக்கு இலவசமாக ஆலோசனைகளையும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கினார்கள்இந்த நிகழ்வில் அன்னவாசல் யூனியன் சேர்மன் ராமசாமி,ஒன்றிய செயலாளர்கள் பழனியாண்டி, நாகராஜ், மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.சிவசாமி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் முருகேசன், ஜனனி ராமச்சந்திரன், அதிமுக நகர செயலாளர் செந்தில், விராலிமலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபன் சக்கரவர்த்தி, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன், அண்ணா தொழிற்சங்கம் சரவணன், ஒன்றிய விவசாய பிரிவு முனியன், ஒன்றிய பேரவை முரளி,உள்ளிட்ட ஏராமான கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.