திருச்சியில் தமுமுக 30வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 29 வது வார்டு ஆவார்ழ் தோப்பு கிளை மற்றும் ப்ரண்ட்லைன் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் வார்டு தலைவர் கபீர் அகமது தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் வார்டு செயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்றார் இம்முகாமை மாநில பொருளாளர் சபியுல்லாகான் துவக்கி வைத்தார். இம்முகாமில் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது, மாநிலத் துணைச் செயலாளர் இப்ராஹிம், மருத்துவ சேவை அணி மண்டல செயலாளர் தல்ஹா பாபு, தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம்சா, மாவட்ட பொருளாளர் ஹீமாயின் கபீர், அண்ணா நகர் பகுதி தலைவர் அப்துல் நாசர், அப்துல் ரசாக் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் தலைமையில் மருத்துவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக சிகிச்சையும் ,மருந்துகளையும் வழங்கினர். இதில் ஏராளமான அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் 29வதுவார்டு மருத்துவ சேவை அணி அஸ்லாம் அகமது நன்றி கூறினார்.